கோலிசோடாவில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பு இயக்குனர் விஜய் மில்டனிடம் நன்றாகவே தெரிகிறது. அதற்கேற்றமாதிரி விக்ரமை வைத்து தற்போது அவர் இயக்கிவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது…
சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் சார்மி ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுகிறார். சார்மி என்ன ஸ்பெஷல் என இயக்குனரிடம் கேட்டால், “சார்மி நடிகை மட்டுமல்லாமல் பிரமாதமான டான்சரும் கூட.. அவர் தனது பிரத்யேகமான நடன அசைவுகளால் அந்த பாடலுக்கே உயிர் கொடுத்து விடுவார்” என்று சர்டிபிகேட் தருகிறார் விஜய் மில்டன்.