கமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் காலமானார்..!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் நேற்று இரவு காலமானார்.. லண்டனில் உள்ள அவரது மகளும் நடிகையுமான அனு ஹாசன் வீட்டிற்கு சென்றிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது.. அவருக்கு வயது 82..

கமலின் இரண்டு சகோதரர்களான சாருஹாசன், சந்திரஹாசன் இருவருமே ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான். இதில் சாருஹாசன் நடிப்பு துறையில் இறங்கிவிட, சந்திரஹாசன் கமலின் தயாரிப்பு நிறுவன பணிகள் முழுவதையும் கவனித்துவந்தார்.. கடந்த ஜன-5ஆம் தேதிதான் சந்திரஹாசனின் மனைவி கீதாமணி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது..

chandrahassanகமல்ஹாசன்கீதாமணிசந்திரஹாசன்சாருஹாசன்