கங்கை அமரன் மீது வழக்கு தொடரும் தயாரிப்பாளர்..!


தயாரிப்பாளர் ஜி.ஆர் என்பவர் ஒரே நேரத்தில் கன்னடத்தில் ‘பீஷ்மா’ மற்றும் தமிழில் ‘காதலி காணவில்லை’ என்கிற இருமொழிப்படத்தை தயாரித்துள்ளார். கன்னடத்தில் சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்ட ஜி.ஆர், தமிழில் சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை போட்டு காட்டினாராம். ஆனால் படத்தை பார்த்த அதிகாரி மதியழகன் இதற்கு டப்பிங் படம் என்றுதான் சான்றிதழ் தருவோம் என கூறினார்களாம்.

இதை மறுத்து தயாரிப்பளார் ஜி.ஆர், ரிவைசிங் கமிட்டிக்கு கோரிக்கை வைக்க, அவர்கள் தங்களது சார்பாக இசையமைப்பாளர் கங்கை அமரனை படம் பார்க்க அனுப்பி வைத்தார்களாம். ஆனால் படத்தை பார்த்துக்கொண்டிருந்த கங்கை அமரன் பாதியிலேயே எழுந்து சென்றாராம். இருமொழி படம் என்பதற்கான ஆவணங்களை காட்டியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம். அதனால் கங்கை அமரன் மீது சென்சார் அதிகாரி மதியழகன் மீது வழக்கு தொடுக்கப்போகிறாராம் ஜி.ஆர்,.

BeeeshmaG RGangai AmaranKaadhali Kaanavillai