கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி சிறப்பு அனுமதி கொடுத்த ‘ராமானுஜன்’


புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஞானராஜசேகரன், தற்போது கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கையைப் படமாக எடுத்துள்ளார்.

ராமானுஜமாக மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபினய் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாமா நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் லண்டனில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை குறும்படங்களைத் தவிர வேறு எந்த சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தராத கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கணித மேதை ‘ராமானுஜன்’ வாழ்க்கையைத்தான் படமாக்குகிறார்கள் என்றதுமே உடனே சிறப்பு அனுமதி கொடுத்தார்களாம்.

படத்தை இயக்குனர் ஞான ராஜசேகரனின் மகள் உட்பட வெளிநாடு வாழ் இந்தியர்கள் நான்குபேர் சேர்ந்து தயாரித்துள்ளார்கள். சுஹாசினி, சரத்பாபு, நிழல்கள் ரவி உட்பட பழைய ஜாம்பவான்கள் நிறைய பேர் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். ரமேஷ் விநாயகம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

AbbasCambridge UniversityGnana RajasekaranRamanujan MovieSarath BabuSuhasini Mani Ratnamகேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டிராமானுஜன்