காதலில் ஏமாந்த விடலைகளுக்கு ஆறுதல் சொல்லும் ‘பல்பு’ சாங்..!

ஒருவன் ஆசை ஆசையாய் செய்யும் காரியத்தில் ஏமாற்றம் அடைவதை ‘பல்பு’ வாங்கிட்டான் என்று சொல்வதுண்டு. அப்படி காதலியிடம் ஏமாந்து ‘பல்பு’ வாங்கிய காதலன் பாடும் விதமாக மஸ்தான்-காதர் இசையில் ‘எங்கடி போன நீ.. ஏமாத்தி போன நீ’ என்ற ஒற்றை பாடலை அபிஷேக் – பிரசாந்த் பாடியுள்ளனர். இந்த ஒற்றை பாடல் வீடியோ ஆல்பத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.பரத் குமார்.

பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத், ‘வாகை சூடவா’ இனியா ஆகியோர் இந்தப் பாடலுக்கு உரியக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். ‘பல்பு சாங்’ ஆல்பத்தை பல்வேறு திரை இசை பாடல்களை வெளியிடும் வரும் புகழ் பெற்ற சரிகமா நிறுவனம் வெளியிடுகிறது.

'வாகை சூடவா' இனியாஏ.ஆர்.பரத் குமார்கணேஷ் பிரசாத்பல்புமஸ்தான்-காதர்