பரபரப்பான திரில்லர் படமாக உருவாகும் ’BP180’ படம் பூஜையுடன் தொடங்கியது!

அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் அதுல் எம்.போஸ்மியா வழங்கும், அறிமுக இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ’BP180’. இதில் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், தமிழ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.மோகன் கலை இயக்குநராக பணியாற்ற, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அதுல் எம்.போஸ்மியா, “இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மிகச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

இயக்குநர் ஜே பி பேசுகையில், “இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, எனக்கு இது முதல் மேடை என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, நான் மிஷ்கின் சாரின் மாணவன் “அஞ்சாதே” படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன். ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன். இதன் மதிப்பு எனக்குத் தெரியும் இப்படத்தைத் தயாரிக்கும் அதுல் சாருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார் அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான், படம் இப்போது தான் துவங்கியுள்ளோம், முடிந்தபிறகு இன்னும் நிறையப் பேசலாம்.” என்றார்.

நடிகை நைனி சாவி பேசுகையில், “எனக்கு இந்தவாய்ப்பு தந்ததற்கு ஜேபி சார் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

நடிகர் அருள்தாஸ் பேசுகையில், “வெளி மாநிலத்திலிருந்து இங்குப் படம் தயாரிக்க வந்துள்ள, தாயரிப்பாளர் அதுல் அவர்களுக்கு வாழ்த்துகள், படத்தின் கதையைக் கேட்டேன், படம் ஆக்சன் படமாக இருக்கும், பாக்யராஜ் சார் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், படம் நன்றாக வரும் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

நடிகர் டேனியல் பாலாஜி பேசுகையில், “என்னை எப்படி இந்தப்படத்திற்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை, இந்தக்கதை பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது என் கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது, உங்களுக்குப் பிடிக்குமாறு படம் செய்வோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசுகையில், “இந்தப்படம் எனக்கு மிகப் புதுமையான ரோல், க்ரைம் திரில்லர் கதை. ஜேபி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப்படம் ரசிகர்களுக்குப் புதுமையாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன் முறையாகப் படமெடுக்கிறார். இயக்குநர் ஜேபி இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இந்தக்கதையை 40 கதைகள் கேட்டு பின் இந்தக்கதையை ஓகே செய்துள்ளார். இந்தப்படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும் தான் நிறைய வேலை இருக்கிறது. கதை மிக திரில்லாக இருந்தது. கதை சொல்லும் போது ஒரு டைட்டில் சொன்னார் ஆனால் இப்போது வைத்திருக்கும் டைட்டில் தான் இந்தப்படத்திற்குப் பொருத்தமான டைட்டில். மிஷ்கின் பேரைக் காப்பாற்றும் வகையில் இப்படத்தைச் சிறப்பாக இயக்குவார் ஜேபி. படம் மிகச் சிறப்பாக வரும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

BP 180Daniel Balajitamil movie BP 180tanya ravichandranThriller Movie 180