விளம்பர படத்திற்காக பிகினி அணிந்தார் பியா..!

சமீபத்தில் ஒரு கானா மியூசிக் மொபைல் ஆப்ஸ் விளம்பர ஷூட்டிங் ஒன்றுக்காக ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்திருக்கிறார் நடிகை பியா.. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்த விளம்பர படத்தில் அவர் பிகினி உடை அணிந்து நடித்துள்ளதுதான். பொதுவாக நம் தமிழ் நடிகைகள் பிகினி அணிவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் தானே… ஆனால் பிகினி அணிவதற்கான ஸ்பெஷல் உடலமைப்பு எதுவும் தேவையில்லை என்கிறார் பியா.

“எனக்கும் பிகினி அணிவதில் பெரிய ஆர்வம் இல்லைதான். ஆனால் அந்த விளம்பர படத்தின் கான்செப்ட் அந்தமாதிரி இருந்ததால் ஒப்புக்கொண்டேன்.. வெளிநாட்டில் தான் படப்பிடிப்பு என்றாலும் பிகினி அணிந்து நடிக்க சற்று கூச்சமாகத்தான் இருந்தது. ஆனால் அங்குள்ளவர்கள் கடற்கரைக்கு வரும் கோலத்தை பார்த்தபோது என் கூச்சம் போய்விட்டது” என்கிறார் பியா.

பியா