மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா ‘பிளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்த மொத்தம் 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருது விழாவில் ‘பிக் பாஸ்’ புகழ் பரணிக்கு ‘மலேசிய மக்கள் நாயகன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை பரணியின் ரசிகர்கள் அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
நடிகர் அபி சரவணன் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தன்’, ‘2017 முன்னுதாரண இளைஞர்’ ஆகிய இரு விருதுகள் அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது