சீனுராமசாமியின் கதையை இயக்குகிறார் பாரதிராஜா!

நடந்தது இதுதான். இயக்குனர் சீனுரமசாமி சமீபத்தில் வெளியூர் பயணம் செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்திருக்கிறார். அப்போது தான் உருவாக்கிவரும் ஸ்கிரிப்ட்டின் சாராம்சத்தை அவரிடம் சொல்ல, அதைக்கேட்டு பிரமித்துப்போன பாரதிராஜா அந்தக்கதையை தானே தயாரித்து இயக்குவதாக கூறியிருக்கிறார்.

மேலும் முழுக்கதையையும் எழுதிமுடித்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறும் கூறியிருக்கிறார். தேனியை கதைக்களமாக வைத்து இந்தக்கதையை உருவாக்கிவரும் சீனு ராமசாமியிடம், “கதையைக்கேட்டதும் படத்தை நானே இயக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. ஆனால் நீ விரும்பினால் நீயே படத்தை இயக்கு.., நான் படத்தை தயாரிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார் பாரதிராஜா.

அவ்வளவு பெரிய ஜாம்பவான் தன் கதையை இயக்குவதாக கூறியதால் ஆடிப்போயிருந்த சீனுராமசாமி பாரதிராஜாவையே இயக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் முழுக்கதையையும் எழுதி முடித்துவிட்டு பாரதிராஜாவை சந்திக்கும்போதுதான் இந்தப்படத்தை அவரே இயக்குகிறாரா என்பது உறுதியாகும் என்கிறார் சீனுராமசாமி.

சீனுராமசாமிபாரதிராஜா
Comments (331)
Add Comment