மும்மொழிகளில் நடிக்கும் பரத் – ஆரம்பித்தது இரண்டாவது இன்னிங்ஸ்

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பரத் அவர் மனைவி வந்த ராசியோ என்னமோ 555 படம் மூலமாக திரும்பவும் ஃபார்முக்கு திரும்பியிருக்கார். சசி டைரக்‌ஷனில் பரத் நடித்த படம் 555 படம் வெற்றிகரமாக ஐம்பது நாட்கள் ஓடியது.

தற்போது ‘ஜாக்பாட்’ என்ற இந்திப்படத்தில் நடித்துவரும் பரத் மலையாளத்தில் யுடிவி தயாரிக்கும் ‘கூத்தாரா’ என்ற படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தமிழில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க இருக்கிறார் பரத்.

ஏ.ஆர்.முருகதாஸிடம் கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆர்.செந்தில்குமார் என்பவர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பரத். இந்தப்படத்தில் சத்யராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விரைவில் இந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Bharathபரத்
Comments (1)
Add Comment
  • omnopsedip

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?