வங்காள சினிமா நட்சத்திரம் சுசித்ரா சென் காலமானார்


வங்காள சினிமாவின் இரண்டு அடையாளச் சின்னங்களாக கருதப்படுபவர்கள் இயக்குனர் சத்யஜித் ரேயும் நடிகை சுசித்ரா சென்னும் தான். இந்திய சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்திய சத்யஜித்ரே கடந்த 1992ஆம் வருடம் காலமாகிவிட்டார். வங்கத்து சினிமாவின் மாணிக்கமான சுசித்ரா சென்னும் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

1931ஆம் வருடம் பிறந்த சுசித்ரா சென்னுக்கு தற்போது 82 வயது. 1952ல் வங்காள சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர் தொடர்ந்து வங்காளம் மற்றும் இந்திப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். 1955ம் ஆண்டு திலீப்குமாருடன் நடித்த தேவதாஸ் படம் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். பிரபல நடிகை மூன்மூன் சென் இவரது மகள் தான்.

கருப்பு வெள்ளை சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்த சுசித்ராசென் கடந்த ஒருமாத காலமாக கடுமையான மூச்சுத்திணறலால் போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DevadasDilip KumarSuchitra Sen
Comments (0)
Add Comment