துவங்கியது அடுத்த ஆட்டம்..!


அமர்க்களம்.. அட்டகாசம்.. ஆரம்பம்.. அஜீத் பட டைட்டில்களாக இருந்தாலும் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் நேற்று துவங்கியுள்ள விஜய் படத்தின் பூஜைக்கும் இந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்வோமே.. ‘துப்பாக்கி’யின் வெற்றிக்குப்பின் மீண்டும் கைகோர்க்கும் இவர்கள் இருவரும் நேற்று கொல்கத்தா காளிகட் கோவிலில் வெற்றிகரமாக பூஜையுடன் படத்தை துவக்கியுள்ளனர்.

ஒரு சூப்பர்ஹிட் கொடுத்து தன் கேரியரை தூக்கி நிறுத்திய இயக்குனருடன் மீண்டும் பணிபுரிகிறோம் என்கிற சந்தோசம் விஜய்யின் முகத்தில் தெரிவதை பாருங்கள். அட..அட..
சமந்தா தான் ஹீரோயின். ஒளிப்பதிவு ஜார்ஜ் சி வில்லியம்ஸ், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் என வலுவான டீமுடன் களம் இறங்கினாலும் இந்தமுறை முருகதாஸின் படத்துக்கு இசையமைப்பது அவரது ஃபேவரைட் மியூசிக் டைரக்டர் ஹாரிஸ் ஜெயராஜ் அல்ல.. நம்ம அன்லிமிட்டேட் ஸ்டார்( பட்டத்தை நாம கொடுப்போமே) அனிருத். ம்ம்.. அப்ப விஜய்க்கும் ஒரு ‘கொலவெறி’ காத்திருக்கு !

A R murugadossAnal ArasuAnirudhGeorge C WilliamsLalgudi IllayarajaLYCA PRODUCTIONS PVT.LTDSamanthaSreekar PrasadVijay
Comments (1)
Add Comment
  • Sylfirm ราคา

    820175 545455I consider something truly particular in this site . 817180