சிம்பு மீது நீதிபதி அதிருப்தி ; வழக்கு ஜனவரி-4க்கு ஒத்திவைப்பு…!


பீப் சாங் விவகாரத்தில் சிக்கிக்கொண்ட சிம்பு இதுநாள் வரை தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர முருத்தபடியே இருக்கிறார். இதனால் பொதுநல வழக்குகள் அவர் மீது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வரும் ஜனவரி-4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் “இந்த வழக்கு விசாரணையின்போது பொதுமேடையில் இருக்கும் உங்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது. சமூகம் பாதிக்கப்படுகிறது என்றால் தீய செயல் பரவாமல் காக்க வேண்டியதும் சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், அரசு எந்திரங்கள் மற்றும் நீதிமன்றத்தின் கடமை.” என சிம்பு மீதான தனது அதிருப்தியையும் வெளியிட்டார் நீதிபதி.

AniruthBeep SongJan-5Simbut rajendran