விஷ்ணுவுடன் ஜோடி சேர்ந்த அழகிய பிசாசு..!

டைரக்டர் கண்ணன் தற்போது ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ படத்தின் வேளைகளில் பரபரப்பாக இருக்கிறார். முதலில் இந்தப்படத்தில் அட்டகத்தி தினேஷும் ஸ்ரீதிவ்யாவும் தான் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஷ்ணு கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ‘பிசாசு’ படத்தில் நம்மை மிரட்டிய, ஒரு காட்சியை தவிர படம் முழுவதும் தனது ஒரிஜினல் முகத்தையே காட்டாமல் நடித்த பிரயாகா.

இந்தப்படத்திற்காக சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக் பஜாரான ரிச்சி ஸ்ட்ரீட் போல செட் ஒன்றை தத்ரூபமாக போட்டிருக்கிறார்களாம். கதைப்படி விஷ்ணு காலேஜில் இருந்து பாதியிலேயே படிப்பை விட்டவராக நடிக்கிறார். மே மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்க உத்தேசித்துள்ள கண்ணன், இந்தப்படத்திற்காக கனடாவுக்கும் பறக்க இருக்கிறாராம்.

‘அட்டகத்தி’ தினேஷ்Attakathi DineshDirector KannanPrayaga MartinVishnuடைரக்டர் கண்ணன்பிரயாகாவிஷ்ணுஸ்ரீதிவ்யா