பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன் திருமணம் நிச்சயம் ஆனது..!


திரையுலகின் அடுத்த காதல் ஜோடியான பாபிசிம்ஹா-ரேஷ்மி மேனன் இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்கள்.. இதற்கான நிச்சயதார்த்த விழா இன்று மயிலாப்பூரில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்றது. இனிது இனிது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மி மேனன். உறுமீன் படத்தில் நடித்த போது பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இருந்தாலும் இவர்கள் இருவரும் மீடியாக்களிடம் இந்தக் காதலை தொடர்ந்து மறுத்து வந்தனர். ஆனால் தற்போது இருவீட்டில் உள்ளவர்களின் சம்மதத்துடன் தங்களது காதலை, திருமணம் என்கிற வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்

Bapi SimhaEngagementReshmi Menon