நேற்று முன் தினம் இந்தியில் அக்சய் குமார் நடித்த ‘பேபி’ திரைப்படம் வெளியானது. நீரஜ் பாண்டே இயக்கிய இந்தப்படத்தில் டாப்சி, ராணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் பாகிஸ்தானிய நடிகர்களான மிகால் ஜுல்பிகர் மற்றும் ரஷீத் நாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் பாகிஸ்தானியர்களை தீவிரவாதிகள் போல சித்திரித்திருப்பதாக கூறி, தற்போது இந்தப்படத்திற்கு பாகிஸ்தானில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம்கள் மீது எதிர்மறையான தோற்றம் ஏற்படுமாறும், கெட்டவர்களாக உலாவரும் கதாபாத்திரங்களுக்கு இஸ்லாமிய பெயர்களை வைத்தும் தவறாக சித்தரித்துள்ளதாக கருதிய கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள சென்சார் போர்டு அமைப்புகள் இந்த தடையை விதித்துள்ளதாக பாகிஸ்தானுக்கு இந்திப்படங்களை வாங்கி விற்கும் விநியோகஸ்தர் ஒருவர் கூரியுள்ளார். மேலும் காராச்சியில் உள்ள சினிமா இணையதளங்களிலும் இந்தப்படம் தியேட்டர்களில் திரையிடப்படுட்டுள்ள விபரங்களும் அதிரடியாக தூக்கப்பட்டுள்ளன.