‘பலுபு’ வந்தது போன வருஷம்.. ‘பவர்’ வருது. இந்த வருஷம்..!

 

டோலிவுட்டின் மாஸ் மகாராஜ் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ரவிதேஜா. ரவிதேஜா படங்களை அவரோட ரசிகர்கள் எந்த அளவு எதிர்பார்ப்பாங்களோ அதே அளவுக்கு நம்ம தமிழ்சினிமா ஹீரோக்களும் அவரோட பட ரிலீஸை ஆவலோட எதிர்பார்ப்பாங்க. வேற எதுக்கு.. தமிழ்ல ரீமேக் பண்றதுக்குத்தான்.

ஜெயம் ரவி நடித்த ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘தில்லாலங்கடி’ மற்றும் கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ன்னு ரவிதேஜா நடித்த படங்கள் தமிழ்ல ரீமேக் ஆகி வெற்றிபெற்றிருக்கின்றன.  ஆனால் ஆச்சர்யமாக, கடந்த வருஷம் ஜூன் மாதம் வெளியான ‘பலுபு’ படத்தை தொடர்ந்து ஒரு வருட காலமாக அவரது படம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் சோர்ந்து போயிருக்கும் அவரோட ரசிகர்களை குஷிப்படுத்துகிற மாதிரி அடுத்தவாரம் (செப்-12) ரவிதேஜா நடித்துள்ள ‘பவர்’ படம் வெளியாக உள்ளது. ஹன்சிகா தான் கதாநாயகி. ‘லிங்கா’ படத்தை தயாரிக்கிற ராக்லைன் வெங்கடேஷ் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். பல முன்னணி நடிகர்கள் சந்திக்கக்கூடிய ஏற்ற, இறக்கங்களை ரவிதேஜாவும் சந்தித்தாலும், இன்றும் அவருக்கான மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது.

BalupuHansikaHansika MotwaniLingaM Kumaran S/o MahalakshmiPowerRavitejaRock Line VenkateshThillalangadiஎம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமிகார்த்திசிறுத்தைதில்லாலங்கடிபலுபுபவர்ரவிதேஜாராக்லைன் வெங்கடேஷ்லிங்காஹன்சிகா