52 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்தார் பாலாஜி மோகன்

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி மோகன். இப்போது தனது அடுத்த படமான ‘வாய மூடி பேசவும்’ படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கியுள்ளார். மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். ஏற்கனவே ‘சலாலா மொபைல்ஸ்’ என்கிற மலையாளப் படத்திலும் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர். அதனல் இனி தமிழிலும் மலையாளத்திலும் இது ஹாட் ஜோடி ஆகும் என எதிர்பார்க்கலாம்.

ஒருவழியாக இப்போது ‘வாய மூடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் பாலாஜி மோகன். அதுவும் 52 நாட்களிலேயே நடத்தி முடித்திருக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாலாஜி மோகன். இதன்மூலம் அனிருத்தும் மலையாள சினிமாவில் காலடி எடுத்துவைக்கிறார்.

Balaji MohanDulhar SalmanNazriyaSalala MobilesVaaya Moodi Pesavum
Comments (0)
Add Comment