‘பாலச்சந்தருக்கு சிலை ; அவர் பெயரில் ஒரு தெரு’ – அரசுக்கு இயக்குனர் சங்கம் கோரிக்கை..!

 

சமீபத்தில் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு. இன்று இருக்கும் இயக்குனர்களில் 99 சதவீதம் அவரது பாதிப்பு துளியேனும் இல்லாதவர்களாக இருக்கமாட்டார்கள்.

அதனால் தலைமுறைகள் தாண்டி ஒரு சரித்திரமாக அறியப்படவேண்டிய கே.பாலச்சந்தருக்கு சிலைவைக்க வேண்டும் எனவும் மயிலாப்பூரில் உள்ள வீதி ஒன்றிற்கு அவரது பெயரைவைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அதுமட்டுமல்ல இயக்குனர்கள் சங்க கட்டிடத்திற்கு ‘பாலச்சந்தர் இல்லம்’ என பெயர் வைக்கலாமா என ஆலோசனையும் நடந்து கொண்டிருப்பதாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.செல்வமணிஇயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்பாலச்சந்தர் இல்லம்