‘தாரை தப்பட்டை’யுடன் சற்குணம் படத்திற்கும் பூஜை போட்டார் பாலா..!

இயக்குனர் பாலா தான் தயாரிக்கும் இரு படங்களுக்கான துவக்க விழாவை பூஜையுடன் நடத்தியுள்ளார். ஒன்று அவர் இயக்கும் ‘தாரை தப்பட்டை’.. மற்றொன்று சற்குணம் இயக்கும் பெயரிடப்படாத படம்..

‘தாரை தப்பட்டை’யில் கதாநாயகனாக சசிகுமாரும் அவருக்கு ஜோடியாக வரலட்சுமியும் நடிக்கிறார்கள். இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார். இது இசைஞானி இசையமைக்கும் 1000-ஆவது படம் என்பது ஹைலைட்..

சற்குணம் இயக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரபுசாலமனின் ‘கயல்’ படத்து நாயகி ஆனந்தி.. ஏற்கனவே பாலாவின் தயாரிப்பில் ‘பிசாசு’ என்ற படத்தை மிஸ்கின் இயக்கிவருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AdharvaAnandhiBalaIlayarajaPisasuSarkunamSasikumarThaarai Thappattaiஅதர்வாஆனந்திஇளையராஜாசற்குணம்தாரை தப்பட்டைபாலாபிசாசுமிஸ்கின்வரலட்சுமி