பாலா டைரக்சனில் நடிக்கிறார் ஜோதிகா..!

இயக்குனர் பாலா டைரக்சனில் நடிக்க, நடிப்பு பசி உள்ள ஒவ்வொரு நடிகரும் ஏங்குவது போல, கதாநாயகிகள் பலருக்கும் அந்த விருப்பம் இருக்கவே செய்தது.. இப்போதும் இருக்கிறது.. ஆனால் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவையான நடிகைகளை மட்டுமே இயக்குனர் பாலா தேர்வு செய்வார் என்பதால் பல முன்னணி நடிகைகளுக்கு அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் இன்னும் வருத்தம் தான்.

அப்படி ஒரு வருத்தம் முன்னணி நடிகையாக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி.. நடிகை ஜோதிகாவுக்கும் இருக்கவே செய்தது.. தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக துவங்கி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்துவரும் ஜோதிகாவுக்கு, அவர் வருத்தம் போக்கும் விதமாக தற்போது பாலாவின் டைரக்சனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது..

இன்னும் பெயரிப்படாத இந்தப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

சூர்யாவுக்குள் ஒளிந்திருந்த திறமையான நடிகனை வெளிக்கொண்டுவந்த இயக்குனர் பாலா, இந்தப்படத்தில் ஜோதிகாவின் இன்னொரு புதிய முகத்தை காட்டுவார் என உறுதியாக நம்பலாம்.

36 VayadhinilaeB StudiosBalaEON StudiosJyothikaMagalir MattumMayaviMozhiParadesiThaarai Thappataiசூர்யாஜோதிகாபாலா