ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிப்பில், பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பாபா பிளாக் ஷீப்’.

பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாக உள்ள ’பாபா பிளாக் ஷீப்’ படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மாதவன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அசார் நடனம் அமைக்கிறார். யுகபாரதி, ஏ.பி.ஏ.ராஜா, வைசாக் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

baba black sheep movie poojaraghulRajmohanRomeo picturestamil movie baba black sheep