மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் படம் ‘மீகாமன்’. ஆக்ஷன் படமாக உருவாகிவரும் இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதற்கு முன் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான ‘தடையற தாக்க’ திரைப்படம் அதன் மேக்கிங்கிற்காகவும், திரைக்கதை பாணிக்காகவும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது.
அதேமாதிரி ஒரு தாக்கத்தை தான் ‘மீகாமன்’ டீஸரும் ஏற்படுத்துகிறது. இந்த டீஸரை பார்க்கும்போதும் புதிய களத்தில் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அதற்கேற்ற மாத்ரி இந்தப்படத்தில் ஏழு வில்லன்கள் நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.