உள்குத்து படத்தை தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’.. இரண்டு ஹிட் படங்களின் பெயரை இணைந்து உருவாகும் இந்தப்படத்தில் ‘பட்டதாரி’ பட நாயகி அதிதி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.
இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இந்தப்படத்தைத் தயாரித்து, இயக்குகிறார். ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பிப்-15ல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மணிவாசகம். இந்தப் படங்களை அவருடைய ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மணிவாசகம் மறைவுக்குப் பின் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த இந்த நிறுவனம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.