மலையாள திரையுலகில் இருந்து பல நல்ல படங்கள் தமிழுக்கு ரீமேக் செய்யப்படுவது அதிகரித்து வரும் சூழ்நிலையில் விரைவில் மீண்டும் ஒரு மலையாள படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் வெளியான ‘காக்டெயில்’ படம் தான் தற்போது தமிழில் ‘அதிதி’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது..
இந்தப்படத்தை இயக்கியுள்ளார் பரதன். இவர் வேறு யாருமல்ல.. விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய அதே பரதன் தான். கதாநாயகனாக நந்தா நடிக்க, இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்கிறார் அனன்யா. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
முதன்முறையாக பாடகர் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிகராக நடிக்கிறார்.
காதல், பேமிலி, கிரைம் கலந்த திரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘அதிதி’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பட்த்தின் தன்மையை கருத்தில் கொண்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். வெகு விரைவில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது