மரியான் இயக்குனர் படத்தில் நடிக்கிறார் ‘அசால்ட் சேது’..!

 

இந்த வருட தமிழ்சினிமாவை பொறுத்தவரை அதிகமான புகழ் வெளிச்சம் பாய்ந்துள்ளது ‘ஜிகர்தண்டா’ மூலம் ‘அசால்ட் சேது’வாக மிரட்டிய பாபி சிம்ஹா மீதுதான். ஏதாவது விழாக்களுக்கு அவர் வந்தால் கூட மற்ற அனைவரையும் விட அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பும் கைதட்டலும் அள்ளுகின்றன.

இந்த சூழலில்தான் ‘மரியான்’ பட இயக்குனர் பரத்பாலா சிம்ஹாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவது முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் சினிமாவில் அடுத்தகட்டத்தை நோக்கி சிம்ஹா நகர்கிறார் என்றே சொல்லலாம்.

‘ஜிகர்தண்டா’ படம் வெளியாவதற்கு முன்பே அதாவது அந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே சிம்ஹாவை அழைத்து பேசிய பரத்பாலா சிம்ஹா நடித்த சூதுகவ்வும் மற்றும் நேரம் ஆகிய படங்களை பார்த்துள்ளதாகவும் தனது அடுத்த படத்தில் நடிக்கும்படியும் கேட்டுள்ளார். இப்போது ‘ஜிகர்தண்டா’ சிம்ஹாவை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருப்பதால் இன்னும் மகிழ்ச்சியுடன் இந்த புதிய புராஜெக்ட்டில் விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளாராம் பரத்பாலா.

 

Bharat BalaBobi SimhaJigarthandaMaryanஜிகர்தண்டாபரத்பாலாபாபி சிம்ஹாமரியான்