கமலின் மனைவியாக நடிக்கிறார் ஆஷா சரத்..!

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் தான். கன்னடத்தில் இதை ரீமேக் செய்த இயக்குனர் பி.வாசு கூட அந்த கேரக்டரில் ஆஷாவே நடிக்கட்டும் என விட்டுவிட்டார்.

அதேபோல தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்திலும் ஆஷா சரத் நடித்தால்தான் சரியாக இருக்கும் என கமலும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் ஏகமனதாக தீர்மானித்தார்கள். ‘பாபநாசம்’ படத்தில் அவரது திறமையான நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்ட கமல் அவருக்கு தனது அடுத்த படமான தூங்காவனத்திலும் வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். த்ரிஷா கதாநாயகியாக இருந்தாலும் கூட இந்தப்படத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறாராம் ஆஷா.

ஆஷா சரத்கமல்ஜீத்து ஜோசப்தூங்காவனம்த்ரிஷாத்ரிஷ்யம்பாபநாசம்பி.வாசுமோகன்லால்