விரைவில் மோகன்லாலின் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்’..!

ஜில்லாவில் மோகன்லாலுக்கு தமிழ்ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் மோகன்லால் நடித்த மலையாளப்படம் ஒன்று தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் மோகன்லாலுக்கும் இயக்குனர் மேஜர் ரவிக்கும் ஒரு நட்பு ரீதியான புரிந்துணர்வு உண்டு.

பெரும்பாலும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப்படங்கள்தான். அந்த வகையில் ‘கீர்த்தி சக்ரா’(தமிழில் ’அரண்’), ‘குருசேத்ரா’, ‘காந்தகார்’ என அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட்டாக அமைந்தன.

அந்தவகையில் மோகன்லால் நடிப்பில் மேஜர் ரவி இயக்கிய ‘கர்மயோதா‘ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப்படம் தமிழில் ‘வெற்றிமாறன் ஐ.பி.எஸ்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது

படத்தில் மோகன்லாலுடன் ஜஸ்வர்யா தேவன், முகேஷ், ரியாஸ்கான், சோனா ஆகியோரும் நடித்துள்ளனர். இது ராணுவம் சம்பந்தப்ப்பட்ட கதை இல்லையென்றாலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை கடத்தி தவறான செயல்களுக்கு பயன்படுத்தும் கும்பலை கண்டுபிடித்து அழிக்கும் போலீஸ் அதிகாரியாக மோகன்லால் நடித்துள்ளார்.. கவர்ச்சி நடிகை சோனா வில்லியாக நடித்திருக்கிறார்.

MohanlalVetrimaran IPS
Comments (2)
Add Comment
  • case studies

    55170 374464Need to tow line this caravan together with van trailer home your entire family quick get exposed towards the issues along with reversing create tight placement. awnings 765210

  • O Vídeo Comunitário Número Um do Mundo www Japan Cracked Version

    325340 529101Currently actually do not stop eating because there is however the decision that you will transform into. Work from your home us rrs often a fad for that who wants to earn money yet still enough time requires most substantial occasions utilizing children and kids goes for as the modern habit. attract abundance 234926