இதுவரை சாப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் இளைஞன் தோற்றத்திலேயே நாம் பார்த்துவந்த ஆர்யா, அதிரடியாக தனது தோற்றத்தை மாற்றி நடித்து வருகிறார் ‘கடம்பன்’ படத்திற்காக.. மஞ்சப்பை புகழ் ராகவன் இயக்கும் இந்தப்படம் ஆதிவாசிகளின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது.
இதில் ஆர்யா ஆதிவாசி இனத்தை சேர்ந்தவராக நடிக்கிறார் என்பது நமக்கு தெரியும். காடுகளில் அலைந்து திரிந்து தேன் எடுப்பவராக நடித்து வருகிறாராம் ஆர்யா.. அதேசமயம் காட்டை அழிக்க முற்படும் சமூக விரோத சக்திகளிடம் இருந்து தனி ஒரு ஆளாக போராடி தனது இனத்தையும் காட்டையும் காப்பற்றும் போராளி மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் ஆர்யா.