உடம்பு பருமனாக மாறும்போது ஆண்களை விட பெண்களுக்குதான் கவலை அதிகமாகி விடுகிறது. அப்படி உடல் பருமனான ஒரு பெண் தனது உடலை ஸ்லிமாக்க எடுக்கும் நடவடிக்கைகள் தான் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் பிளாட்.. கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவரும் இந்தப்படத்தை பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது.
இந்தப்படத்தில் உடற்பயிற்சி நிபுணராகவே நடிக்கிறார் ஆர்யா. சமீபத்தில் சைக்கிளிங் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்று வந்திருக்கும் ஆர்யா, அது குறித்த டிப்ஸ்களையும் தர இருக்கிறார். குறிப்பாக இந்தப் படத்தில் ஆர்யாவின் சைக்கிளிங்கிற்கும் முக்கிய பங்கு இருக்கிறதாம்.