இப்படி விதவிதமான கலரில் பேண்ட் போடுகிறீர்களே, ஏதாவது செண்ட்மெண்ட்டா என்று கேட்டால் சிரிக்கிறார் ஆர்யா. “இதுவரை புளூ கலர் ஜீன்ஸைத்தான் மாற்றி மாற்றி அணிந்துகொண்டிருந்தேன். எனக்கே ஒரு கட்டத்தில் அது போரடிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படி கலர்கலராக பேண்ட் போட்டால் யூஸ் பண்ணுவதற்கு ரொம்ப கூலாக இருக்கு. அதோடு நாலு தலைகளாவது நம்மளை திரும்பி பார்க்காதா என்ற நப்பாசையும் ஒரு காரணம். மற்றபடி செண்டிமென்ட்டெல்லாம் எனக்கு கிடையாது.” என்கிறார் ஆர்யா.