ஸ்வீடன் சைக்கிள் ரேஸில் ஜெயித்தார் ஆர்யா..!

 

கடந்த வருடம் மகிழ்திருமேனி இயக்கிய ‘மீகாமன்’ படப்பிடிப்பு சென்னையிலோ அல்லது அதன் மிக அருகில் உள்ள சுற்றுவட்டாரங்களிலோ நடந்தால் அதில் கதாநாயகனாக நடித்த ஆர்யா படப்பிடிப்புக்கு சைக்கிளிலேயே வந்து செல்வார் என நாம் கூட செய்தி வெளியிட்டிருந்தோமே. அந்த அளவுக்கு ஆர்யா சைக்கிள் பிரியர். இல்லையில்லை வெறியர்.

அந்த வெறிதான் தற்போது ஸ்வீடன் நாட்டில் மோட்டாலா என்கிற இடத்தில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் ஆர்யாவை கலந்துகொள்ள வைத்தது. அதுமட்டுமல்ல, 300 கி.மீ தூரத்தை 15 மணி நேரத்தில் கடந்து பரிசையும் தட்டிக்கொண்டுவந்துள்ளார் ஆர்யா. இந்த சைக்கிள் பந்தயத்தின் பாதை சீரான தார் ரோடு அல்ல.. வளைவு பாதை, மண்சாலைகள், மலைப்பாதைகள், ஆறு, குளம் எல்லாம் கலந்த கலவையான கடினமான பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாமகிழ்திருமேனிமீகாமன்ஸ்வீடன்