ஜெயம் ரவியின் ஆரம்பகால பாணிக்கு மாறும் ஆர்யா..


ஹீரோவாக தனது தம்பி ஜெயம் ரவியை அறிமுகப்படுத்த நினைத்த இயக்குனர் ஜெயம் ராஜா, அதற்கு பாதுகாப்பாக தேர்ந்தெடுத்தது தெலுங்கு ரீமேக் கதைகளைத்தான். முதல் படம் வெற்றிபெற்றாலும் அடுத்தடுத்து ஹிடன படங்களின் ரீமேக்கில் நடித்து ஸ்திரமான இடத்தை பிடித்தட ஜெயம் ரவி, அதன்பின் தான் நேரடி கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்..

ஆனால் தொடர்ந்து நேரடி கதைகளில் நடித்து வந்த நடிகர் ஆர்யாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே இறங்குமுகமாக இருப்பதால், சில வெற்றிகளை கொடுத்து தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தத் தற்போது ரீமேக் கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஜெயம் ரவிக்கு தெலுங்கு என்றால் ஆர்யா தேர்ந்தெடுத்துள்ளது மலையாளம்..

அந்தவகையில் தற்போது மலையாள ‘பெங்களூர் டேய்ஸ்’ பட ரீமேக்கான ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் நடித்துமுடித்துவிட்ட ஆர்யா, தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம். அதுமட்டுமல்ல சமீபத்தில் வெளியான திலீப்பின் ‘2 கன்ட்ரீஸ்’ படத்தை அதன் இயக்குனர் ஷபி தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதிலும் ஆர்யா தான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2 CountriesAryaBangalore NatkalJayam RaviOru Vadakkan Selfie