ஆர்யா படத்தை தள்ளிப்போட முடியாத சூழலை விளக்கிய ஆர்.பி.சௌத்ரி..!

தமிழ்புத்தாண்டு தினம் என்றாலே மெகா பட்ஜெட் படங்கள் அணி வகுப்பது சகஜம் தான்.. அந்த வகையில் பி.வாசு-லாரன்ஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிவலிங்கா’ படம் ஏப்-14ல் வெளியாகிறது.. இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி ‘மஞ்சப்பை’ ராகவா – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘கடம்பன்’ படமும் அதே தேதியில் வெளியாகிறது.. இந்த தகவலை சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.

ஆர்யாவின் கடம்பன் படமும் ஏ.எல்.விஜய் டைரக்சனில் ஜெயம் ரவி நடித்துவரும் ‘வனமகன்’ படமும் காட்டை பின்னணியாக கொண்டுதான் உருவாகியுள்ளன.. இரண்டுக்குமே கதைகள் வேறாக இருந்தாலும் அடுத்தடுத்து ரிலீசாகும்போது, ஒரு படத்தைப்போலவே இன்னொரு படம் இருப்பதாக பேச்சு பரவும்.. இது இரண்டாவதாக வெளியாகும் படத்தின் ரிசல்ட்டை பாதிக்கும்..

அதனால் தான் ‘கடம்பன்’ படத்துக்கு இதை விட்டால் நல்ல சூழல் கிடைக்காது என்பதாலும், இன்னும் ஓரிரு மாதங்களில் வனமகன் ரிலீஸாக உள்ளதாலும் தான் ‘கடம்பன்’ படம் சிவலிங்கா’ படத்துடன் மோதவேண்டிய சூழல் உருவாகி விட்டது என விளக்கம் கூறியுள்ளார் ஆர்.பி.சௌத்ரி..

AryaKadambanஆர்.பி.சௌத்ரிஆர்யாஏ.எல்.விஜய்சிவலிங்காஜெயம் ரவிபி.வாசுமஞ்சப்பைராகவா லாரன்ஸ்லாரன்ஸ்வனமகன்