ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் ஆர்யா ஹீரோ..!

ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார். இந்தப்படத்திற்கு ‘கஜினிகாந்த்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் ஆர்யாவுக்கு இது முதல் படம்… ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயிஷா சைகல் நடிக்கிறார்.

பாலமுரளி என்பவர் இசையமிகும் இந்தப்படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். இவர் கௌதம் கார்த்திக் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை இயக்கியவர். அடுத்தததாக தற்போது கௌதம் கார்த்திக்கை வைத்தே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்கிற படத்தையும் இயக்கிவருகிறார். வரும் ஜனவரியில் ‘கஜினிகாந்த்’ படப்பிடிப்பு துவங்க உள்ளது.

AryaSanthosh P JayakumarStudigreenஆர்யாசந்தோஷ் ஜெயக்குமார்ஸ்டுடீயோ கிரீன்