பி.வி.பி. சினிமா கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் இயக்கத்தில் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இந்தப்படம் இது தெலுங்கில் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது. தனது கனவுப்படம் என்று சொல்லும் செல்வராகவன் இந்தப்படத்தை ஃப்ரேம் பை ஃப்ரேமாக செதுக்கியிருக்கிறார். ஆர்யா, அனுஷ்கா இருவருமே தங்களது திரையுலக வாழ்க்கையில் ‘இரண்டாம் உலகம்’ படம் ஒரு மறக்கமுடியாத அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யா, ஜார்ஜியா மற்றும் பிரேசிலின் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய படம் ‘இரண்டாம் உலகம் தான்’. படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஆனால் பின்னணி இசையும் இதர சில பாடல்களும் அனிருத்தின் கைவண்ணம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்தப்படம் உலகெங்கிலும் சேர்த்து மொத்தம் 1200 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு உணர்வை இந்தப்படம் தரும் என்கிறது பி.வி.பி நிறுவனம்.
83863 829388replica watches are incredible reproduction of original authentic swiss luxury time pieces. 855062