‘சர்தார்’, ‘காரி’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர் தனது புதிய படத்தை அறிவித்துள்ளது. ‘மிஸ்டர்.எக்ஸ்’ ((Mr.X) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
எஃப்ஐஆர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். மிகப்பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.
மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு – பிரசன்னா GK. தயாரிப்பு வடிவமைப்பு ராஜீவன். சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா. கலை இந்துலால் கவீத். தயாரிப்பு மேற்பார்வை A.P.பால்பாண்டி. ஆடை வடிவமைப்பு உத்ரா மேனன்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுதுள்ளது.
படத்தில் பங்கேற்கும் மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.