‘நெருப்புடா’ பாடல் மூலம் பிரபலமானவர் பாடகர் அருண்ராஜா காமராஜ். அடுத்ததாக சில படங்களில் நடித்த இவர் இப்போது இயக்குனராகவும் மாறியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையில் எடுத்திராத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார்.
இப்படத்தில் இந்திய பெண்கள் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அருண்ராஜா கூறியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது தேவிகா பல்ஷிகர் என்ற பெண் கிரிக்கெட் வீராங்கனை தானாக முன்வந்து அந்தப் படத்துக்கு உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இவர் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய வரும் இந்திய மகளிர் அணியினருக்கு உதவி பயிற்சியாளருமாக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் இந்தப்பட கதை உருவாக்கத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் தான் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தேவிகா பல்ஷிகரின் இந்த அறிவிப்பு இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்