டைரக்டர் ஆனார் அருண்ராஜா காமராஜ்..!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகயும் பாடகராகவும் பல ஹிட்டுகளை கொடுத்து புகழ் பெற்றவர் அருண்ராஜா காமராஜ்.. குறிப்பாக ‘கபாலி’யில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் மூலம் ஒரே இரவில் பிரபலமானவர். தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.

“இவர் சினிமாவுக்கு வர முதல் மற்றும் முக்கிய காரணமே இயக்குநராக வர வேண்டும் என்றுதான். இதற்கு முன்பு பல குறும்படங்களை எழுதி இயக்கி குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், சிம்பு நடித்து பாதியில் கைவிடப்பட்ட ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

“பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளேன். ஒரு தந்தைக்கும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இருக்கும் அழகான உறவையும் இப்படத்தில் காணலாம். நெகிழவைக்கும் சில நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் இக்கதையில் சேர்த்துள்ளேன்” என்கிறார் அருண்ராஜா காமராஜ்.

இந்தப்படத்திற்காக கிரிக்கெட்டும் ஆட தெரிந்த நடிக்கவும் தெரிந்த பெண்களை கதாநாயகி மற்றும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்தவுள்ளாராம் அருண்ராஜா.

Sivakarthikeyanஅருண்ராஜா காமராஜ்கபாலிசிம்புநெருப்புடாவேட்டை மன்னன்