ரம்யாவிடம் காதலை சொல்ல தயக்கம் காட்டும் அருள்நிதி..!

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என டைட்டிலிலேயே படத்தின் காமெடிக்கு மினிமம் கேரண்டி கொடுக்கிறார் இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா. போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் ஊரில் பிரச்சனையே இல்லையென்றால் எப்படி இருக்கும் எங்கிற யோசனைக்கு இந்தப்படம் மூலம் கற்பனை வடிவம் கொடுத்திருக்கிறார். படத்தின் கதாநாயகன் அருள்நிதி போலீஸ். கதாநாயகி ரம்யா நம்பீசன் டீச்சர்.

‘அன்புச்செல்வன்-மாயா’ பாணியில் போலீஸ்-டீச்சர் காதல் ஒர்க் அவுட் ஆகாதா என்ன நினைத்தால் அங்கே தான் சிக்கலே ஆரம்பிக்கிறதாம்.. அருள்நிதிக்கும், ரம்யாவுக்கும் சின்னவயதில் இருந்தே காதல் தான். ஆனால் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். இப்படியே இதயம் முரளி’ மாதிரி சொல்லாமலேயே தவிக்கும் அருள்நிதி, ரம்யாவை கண்டவுடனே ‘ஜெய்ஹிந்த்’ கவுண்டமணி மாதிரி கனவுலகத்திற்குள் போய்விடுவாராம். மொத்தத்தில் நகைச்சுவையுடன் சேர்த்து காதல் காட்சிகளும் கலகலப்பாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா.

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்அருள்நிதிஎன்.ஜே.ஸ்ரீகிருஷ்ணாரம்யா நம்பீசன்