மொத்த படத்தையும் பார்த்த அஜீத் படம் முடிந்ததும் இயக்குனர் விஷ்ணுவர்தனை கட்டிப்பிடித்து, “எனக்கு மீண்டும் ஒரு பெரிய படத்தை தந்திருக்கீங்க” என ஒரே வரியில் மிகப்பெரிய பாராட்டை அளித்திருக்கிறார். மேலும் படத்தில் ஆர்யாவின் நடிப்பை பார்த்து ரொம்பவே இம்ப்ரெஸ்ஸான அஜீத், ஆர்யாவுடன் தனது மொபைல் சாட்டிங்கில் பேசியிருக்கிறார்.
அந்த சாட்டிங்கின் போது, “ஆர்யாவும் டாப்ஸியும் வரும் காட்சிகள் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கின்றன என்றும் இந்தப்படத்தின் மூலம் வெகுவான ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கப் போகிறவர் ஆர்யாதான் என்றும் இந்தப்படம் வெளியான பின்பு ஆர்யா இன்னும் உயரத்திற்கு போவார் என்றும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அஜீத்தின் இந்தப் பாராட்டுக்களால் உச்சி குளிர்ந்து போயிருக்கிறார் ஆர்யா.