இன்று மாலை உங்கள் ஊருக்கு வருகிறார் அர்னால்ட்..!

‘ஐ’ பட விழாவுக்கு வந்தது போல வேறெந்த விழாவுக்காகவும் அர்னால்ட் நம்ம ஊருக்கு வரவில்லை. அவர் நடித்துள்ள ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ (டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்) படம் மூலம் இன்று மாலை முதல் நம் ஊர் தியேட்டர்களில் அதிரடி காட்சி தர இருக்கிறார் அர்னால்ட்.. ஆலன் டெய்லர் இயக்கியுள்ள இந்தப்படத்தில், ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ படம் மூலம் அனைவரையும் கவர்ந்த எமிலியா கிளார்க் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடரின் இயக்குனரும் ஆலன் டெய்லர்தான் என்பதால் எமிலியாவுக்கு அர்னால்டுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அர்னால்டுடன் நடிப்பதில் எமிலிக்கு ரொம்பவே சந்தோசம். அர்னால்டை பொறுத்தவரை ‘டெர்மினேட்டர்’ பாகங்கள் தான் அவரது அசைக்க முடியாத சொத்து.

1984-ல் ஆரம்பித்த இந்த டெர்மினேட்டர் யுத்தத்தை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக அர்னால்ட் தொடர்ந்து நடத்தி வருவதே ஒரு சாதனை தான். நாளை தமிழகமெங்கும் வெளியாக இருக்கும் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ (டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்) படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.

அர்னால்ட்ஆலன் டெய்லர்எமிலியாஎஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்கேம் ஆப் த்ரோன்ஸ்டெர்மினேட்டர் ஜெனிசிஸ்