பிரசன்னா, சினேகா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கியவர் தான் அருண் வைத்தியநாதன். தனது இரண்டாவது படத்திலேயே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து மலையாளத்திலேயே ‘பெருச்சாழி’ என்கிற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர். இப்போது தனது மூன்றாவது படத்தை தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுனை வைத்து இயக்குகிறார்.
இந்தப்படத்தில் அர்ஜூனுடன் பிரசன்னாவும் கைகோர்த்துள்ளார். கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமாரும் கன்னடத்தை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரனும் நடிக்கின்றனர்.. இந்தப்படத்திற்கு தமிழில் நிபுணன் என்றும் கன்னடத்தில் ‘விஸ்மயா’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர். ‘கபாலி’ படத்தில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ‘நெருப்புடா’ பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் இந்தப்படத்தில் அதேபோல பொறி பறக்கும் பாடல் ஒன்றை எழுதியுள்ளாராம்.