தயாரிப்பில் முதல் அடி எடுத்துவைத்த ஆரா சினிமாஸ்..!

உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் மூலம் பட விநியோகத்தில் இறங்கிய ஆரா சினிமாஸ் அடுத்தடுத்து உப்புக்கருவாடு, மசாலா படம், அஞ்சல ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டதில் ஓரளவு நுணுக்கங்களை கற்றுக்கொண்டு இருமுகன், தேவி என பெரிய படங்களை வாங்கி வெளியிட்டது..

தற்போது தயாரிப்புத்துறையிலும் அடியெடுத்து வைத்துள்ள இந்த நிறுவனம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்கிற படத்தை தயாரிக்கிறது.. குறும்படங்களையும் விளம்பர படங்களையும் இயக்கிய அனுபவத்துடன் இயக்குனராக களம் இறங்கியுள்ளார் அவினாஷ் கிருஷ்ணா என்பவர்..

ராஜதந்திரம் படத்தில் நடித்த வீரா இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். அரசியலை மையமாகவைத்து முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கிறதாம் இந்தப்படம். சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் துவக்க விழாவில் கௌதம் மேனன், ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘மசாலா படம்Auraa Cineamsஅஞ்சலஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பாஅவினாஷ் கிருஷ்ணாஆரா சினிமாஸ்இருமுகன்உப்புக்கருவாடுகௌதம் மேனன்ஞானவேல் ராஜாதேவிராஜதந்திரம்வீரா