‘அரண்மனை’ கம்பெனிக்கு மீண்டும் ‘கலகலப்பு’ ஊட்டும் சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர்.சியிடம் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அவர் படத்தில் நடித்த நடிகர்கள் மீண்டும் அவரது டைரக்‌ஷனில் நடிக்க விரும்புவார்கள்.. அதேபோல அவரை வைத்து படம் தயாரிக்கும் நிறுவனமும் மீண்டும் அவரை வைத்தே படம் தயாரிக்க விரும்பும்.

இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை’ படத்தில் ஹன்சிகா நடிப்பதும் அந்த வகையில் தான். இந்தப்படத்தை தயாரித்துவரும் விஷன் ஐ குளோபல் மீடியா நிறுவனம் மீண்டும் தனது அடுத்த படத்தையும் சுந்தர்.சி டைரக்‌ஷனில் தயாரிக்க முன்வந்திருப்பதும் அந்த சிறப்பம்சத்தினால் தான்.

அப்படி அவர்கள் தயாரிக்கும் அடுத்த படம் சுந்தர்.சி ஏற்கனவே இயக்கி சூப்பர்ஹிட்டான ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் தான். இதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த நிறுவனம் ஜீவா நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிக்க இருக்கிறது

AranmanaiHansikaKalakalappuSanthanamSundar CVishion I Global Mediaஅரண்மனைகலகலப்புசுந்தர்.சிவிஷன் ஐ குளோபல் மீடியா நிறுவனம்ஹன்சிகா