ஹன்ஷிகா மாறவில்லை.. சந்தானம் தான் மாறிட்டார்..!

சின்ன குஷ்பு என எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை சுந்தர்.சி படங்களின் ஆஸ்தான நாயகியாகவே மாறிவிட்டார் ஹன்ஷிகா. அரண்மனை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்த ஹன்ஷிகா, இப்போது நான்காவது முறையாக சுந்தர்.சி இயக்கவுள்ள ‘அரண்மனை-2’விலும் இணைந்துள்ளார்.

சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்தாலும் ஹன்ஷிகாவுக்கான முக்கியத்துவம் குறையாது என்றே தெரிகிறது. ஆனால் சுந்தர்.சியின் ஆஸ்தான காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் ‘அரண்மனை’ முதல் பாகத்தில் நடித்தாலும், இந்தப்படத்தில் நடிக்கவில்லை. மாறாக முதன்முறையாக சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றுகிறார் காமெடி நடிகர் சூரி..

அரண்மனைஅரண்மனை-2சுந்தர்.சித்ரிஷாஹன்ஷிகா