தமிழ்சினிமாவுக்கு பேய்ப்படங்களில் இருந்து தற்காலிக இடைவேளை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த இடைவெளிக்குப்பின் வந்து அனைவரையும் மிரளவைக்கும் படமாக சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-2 படம் இருக்கும் என்றே தெரிகிறது. விறுவிறுப்பாக நடந்துவந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து தற்போது இந்தப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.. பேய்ப்படம் என்றாலும் ‘U’ சான்றிதழ் வாங்குவது என்றால் அதுதான் சுந்தர்.சியின் ஸ்பெஷாலிட்டி. சித்தார்த், த்ரிஷா, ஹன்ஷிகா என இந்தமுறை புது கூட்டணி அமைந்திருக்கும் இந்தப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.