சில தினங்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான், தன் வீட்டுடன் இணைந்துள்ள தனது ஸ்டுடியோவில் தனது சவுண்ட் இஞ்சினியருடன் இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதிகாலை மூன்று மணி அளவில் திடீரென ஸ்டுடியோவிற்குள் நுழைந்த ரஹ்மானின் மகன் அமீன் அவரிடம் அனைத்தையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தூங்குங்கள்” என்று கூறியுள்ளான்.
மேலும் தன் தந்தையிடம் தினசரி ஏழு மணி நேரமாவது கட்டாயம் தூங்கவேண்டும் என கட்டளையும் போட்டிருக்கிறான். தன் மகன் அவ்வளவு அதிகாலையில் தனது ஸ்டுடியோவிற்குள் நுழைந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டு போய்விட்டார். இதை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “நாம் தான் இன்னும் அவர்களை குழந்தைகளாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்கள் இதோ நமக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு விடுவிடுவென்று வளர்ந்துவிட்டார்கள்” என்றும் தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்.