தென்னிந்திய மொழிகள் நான்கிலும் நடித்துவிட்ட ராய் லட்சுமி, பாலிவுட்டுக்கு போவதற்கு சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த வாய்ப்பு ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இந்தியில் இயக்கிவரும் ‘அகிரா’ படம் மூலம் ராய்லட்சுமிக்கு வாய்த்திருப்பதில் ரொம்பவே சந்தோசம் அவருக்கு.. சோனாக்சி சின்ஹா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் ராய் லட்சுமிக்கு கொஞ்சநேரமே வந்துபோகும் சிறப்புத்தோற்றம் தான்..
பாலிவுட்டில் நுழையும்போதே முதன்முதலாக கெஸ்ட் ரோல் பண்ணினால் அங்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் பிரகாசமாக அமையுமா என்று கேட்டால், “பாலிவுட் சூழ்நிலையே வேறு. அங்கு மிகப்பெரிய நட்சத்திரங்களும் இப்படி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பது இயல்பான ஒன்றுதானே. அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் எனது கதாபாத்த்திரத்தின் முக்கியத்துவம் குறித்து முருகதாஸ் விளக்கியதும் என்னால் மறுக்க முடியவில்லை” என்கிறார் ராய் லட்சுமி.