’போர் தொழில்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்!

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது.

இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமான காணொளி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். ‘போர் தொழில்’ எனும் தலைப்பு, ‘ஆர்ட் ஆஃப் வார்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கின்றனர்.

இந்நிறுவனம் இதற்கு முன் ‘ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம் (தமிழ்), குருதிக்காலம் (தமிழ்), இரு துருவம் (தமிழ்) உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை தயாரித்து வழங்கி உள்ளது. மேலும் இந்நிறுவனம், தென்னிந்திய பொழுதுபோக்குத்துறை சந்தையில் மாறுபட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான வலுவான அர்ப்பணிப்புடன் பல்வேறு மொழிகளில் திரைப்படம் மற்றும் பிரத்யேக இணைய தொடர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

Applause EntertainmentAshok Selvanpor thozhilSarathkumar